மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு – சுப.உதயகுமாரன் நன்றி

ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

மார்ச் 20 அன்று திருநெல்வேலியில் தேர்தல் பரப்புரை செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் யாவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருமபப் பெறப்படும் என்றார்.

இதற்கு அணுசகதிக்கேதிரான மக்கள் இயக்கத்தலைவர் சுப.உதயகுமாரன் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளீயிட்டுள்ள பதிவில்….

எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறோம், அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

நேற்று (மார்ச் 20, 2021) நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோகம் உள்ளிட்ட வழக்குகளைத் திரும்பப்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறோம், அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
மார்ச் 21, 2021

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response