மு.க.ஸ்டாலின் 1000 எடப்பாடி 1500 – ஏலம் தொடங்கியது

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தொகுதிப் பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை குறித்த ஏற்பாடுகளிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியிலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. குறிப்பாக, அதிமுக சார்பில் முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை ஆகியன குறித்து சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்குப் பின் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் கூட்டாக பேட்டியளித்தனர்.

முதலில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி,

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவித்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும். வரும் 12-ம் தேதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

நேற்று திமுக தலைவர் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response