பாமகவுக்கு 23 தொகுதிகள் – தொகை எவ்வளவு?

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருகிற 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, வழக்கம்போல முன்கூட்டியே வந்து பேச்சுவார்த்தை முடித்து விட்டது. அதன்படி, பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தேர்தல் செலவுக்காக என்று பெரும் தொகை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெரும் தொகை என்றால் சுமார் 230 கோடி என்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் பேசப்படுகிற இதுபோன்ற செய்திகள் எந்தக்காலத்திலும் யாராலும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படமுடியாதவை.

அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதால் இங்கு பதிவு செய்யப்படுகிறது.

Leave a Response