நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் போட்டி – தொகுதியையும் அறிவித்தார்

விரைவில் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகமெங்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பும் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் நேற்று வெளியிட்ட குரல் பதிவில் கூறும்போது,

‘முதல்முறையாக வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளேன். மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் உதய்நிதி போட்டியிடுவார் என்றும் பாசக சார்பில் குஷ்பு போட்டியிடுவார் என்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நான் போட்டியிடுகிறேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மன்சூர் அலிகான்.

Leave a Response