ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதைப் படமாக எடுக்கமுடியாது- நடிகர் ராஜ்கிரண் குமுறல்

நவீன்சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் ‘சிவப்பு’. சத்யசிவா இயக்கம். முக்தா ஆர்.கோவிந்த், கீதா தயாரிப்பு. இப்படத்தின் சிறப்புக் காட்சி பத்திரிக்கையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது.

படம் நிறைவடைந்ததும்  ராஜ்கிரண் பேசினார். அவர் பேசும்போது, இலங்கைப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது இனப்படுகொலை. இந்தச் சோகத்தை தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் ஊடகங்களில் வெளிவராதவண்ணம் இந்திய வெளியுறவுத் துறை தடுத்துவிட்டது.

பாரதிய ஜனதா அரசு இந்துத்வா பற்றி பேசுகிறது. இலங்கையில் 2 ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததா? அதற்கு மாறாக ராஜபக்சேவுக்கு திருப்பதி கோயிலுக்கு வந்து செல்ல சிவப்புக் கம்பளம் விரித்தது.

தமிழ் இனம் வருங்காலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக சிங்களர்களைவிட்டு தமிழ் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இங்கு மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி ஒருவரை அடித்து கொல்கின்றனர். ஆனால் இலட்சக்கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை கேட்க மறுக்கின்றனர். வறுமையில் பெண்கள் சிலர் விபசாரம் செய்கின்றனர்.

இந்தக் கொடுமையை எல்லாம் படத்தில் காட்டக்கூடாது என்று தடை உள்ளது. காட்டினால் தணிக்கைச்சான்று கொடுக்கமாட்டார்கள். எனவே இப்படியெல்லாம் நடந்தது என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. என்வே இந்தப்படத்துக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.  இவ்வாறு ராஜ்கிரண் உணர்ச்சி வசப்பட்டு பேசியபோது கதறி அழுதார்.

Leave a Response