சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழ்மீனவப்பெண்ணுக்கு உலக அளவில் விருது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடல்சார் ஆய்வு மையம் ஆண்டுதோறும் கடல் வாழ் உயரினங்களை பாதுகாப்பவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான விருதுக்காக ராமேஸ்வரம் அருகே உள்ள சின்னப்பாலத்தைச் சேர்ந்த மீனவப் பெண் லெட்சுமி தேர்வு செய்ய ப்பட்டார்.

லெட்சுமி தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண் களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் அவர்களது வாழ் வாதாரத்தை சுரண்டி வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், கடல்சார் விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய முறையில் பாசி சேகரிப்பதால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதை லெட்சுமி எடுத்துரைத்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களில் 2000-க்கும் மேற் பட்ட பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தி அவர் களுக்கு பயோ மெட்ரிக் கார்டுகள் வழங்கி வாழ்வாதாரத்தை தொடர வைத்துள்ளார்.

இதற்காக லெட்சுமிக்கு கடல்சார் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது என்று அமெரிக்காவின் சீகாலஜி எனப்படும் கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில், அக்டோபர் 8ம் தேதி நடந்தது. ‘சீகாலஜி’ அமைப்பின் நிறுவனர் பால் ஆலன் காக்சிடமிருந்து, லட்சுமி மூர்த்தி விருதை பெற்றுக் கொண்டார். விருதுடன், 65 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது. விருது வாங்கிக்கொண்டு சென்னை திரும்பிய அவரை, தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ உள்ளிட்ட, மீனவ சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.விருது பெற்ற லட்சுமி மூர்த்தி கூறுகையில், ”கடல் வளம், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு, இரண்டு மாத விடுப்பு விட்டும்; ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கடல் பாசி எடுக்கிறோம். எனக்குக் கிடைத்த இந்த அமெரிக்க விருது, தமிழக மீனவப் பெண்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்; மிகுந்த
மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

Leave a Response