2019 ஆம் ஆண்டு வரை மத்திய எஃகுத் துறை அமைச்சராக இருந்தவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங் தற்போது பா.ச.க வின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது மத்திய பா.ச.க நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். இவர் அரியான மாநிலம் சம்ப்லா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.
2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்த மூத்த விவசாய சங்கத் தலைவரான சோட்டுராம் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி எல்லையில் சென்று போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக பா.ச.கவில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.
ஏற்கெனவே, விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி வெளியேறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், புதிய வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே, பாசகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில், பாசகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.