திருக்குறளை தேசியநூலாக அறிவிக்கவேண்டும்- குமரிஅனந்தன் கோரிக்கை

வி.ஜி.பி. பிலோமினா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 133 மாணவர்கள் திருவள்ளுவர் போல் வேடம் அணிந்து கைகளில் திருக்குறள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மெட்ரோ ரயிலில் சிறுவர்க ளுடன் பயணம் மேற்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் குமரி அனந்தன் கூறும்போது, “திருக்குறள் இந்தியர்களுக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. உலக மக்கள் அனைவருக்காகவும் எழுதப்பட்டிருக்கும் நூல். அதை நமது தேசிய நூலாக அறிவிப்பது அவசியம்” என்றார்.

இது குறித்து வி.ஜி.சந்தோசம் கூறும்போது, “திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமருக் கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசு இதனை பரிசீலிப்பதாக தெரி வித்துள்ளது. வி.ஜி.பி. அருகில் 1330 குறள்களையும் பாறைகளில் செதுக்கி குறள் மலை அமைக்க வுள்ளோம். அதே போன்று 1330 திரு வள்ளுவர் சிலைகளை ஒன்றாக அமைக்கவுள்ளோம்” என்றார்.

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறும்போது, “இதுவரை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் வாரணாசி, சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், அந்தமான் உள்ளிட்ட நகரங்களிலும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பாக திருவள்ளுவர் சிலைகள் நிறு வப்பட்டுள்ளன.

திருக்குறளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மெட்ரோ ரயில் பயணம் ஒரு புதிய முயற்சியாகும்” என்றார்.

Leave a Response