ஆபரேசன் கொங்கு – வானதி சீனிவாசனின் முதல்வெற்றி

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர கே.பி.ராமலிங்கம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள பாசக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாசக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் பாசகவில் இணைந்தார்.

கே.பி.ராமலிங்கத்துக்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை பாசக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.

அதே நேரம், கொங்கு செங்கோட்டையன், எடப்பாடி ஆறுமுகம், தொழிலதிபர் ஜெகதீசன் ஆகியோரும் முறைப்படி பாசக உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டனர்.

பாசகவின் அகில இந்திய மகளிரணித் தலைவராகப் பொறுப்பேற்ற வானதிசீனிவாசன் முயற்சியில் இவர்கள் அனைவரும் பாசகவில் இணைந்தனர் என்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response