இன்று முதல் இணையத்தில் பசும்பொன் தேவர் வரலாறு ஆவணப்படம்

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்குப் பாடுபட்ட முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவணப் படத்தை “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை என்பதால் “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணப் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவணப் படம் வணிக ரீதியில் வெளியான ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.

இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் இன்று (அக்டோபர் 30 தேதி) இணையத்தில் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று (29.10.20) மதியம் 1 மணிக்கு “பசும்பொன் தேவர் வரலாறு” ஆவணப் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் பாரதிராஜா அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படத்தை, நீண்டகாலம் விளம்பரத் துறையில் கோலோச்சிவரும் பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றிய எம்.பி.ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்றுப் படத்துக்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

படத்தில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் வாகை சந்திரசேகர். இதற்குப் பாடல்கள் எழுதியிருப்பவர் யுகபாரதி.

படத்தொகுப்பு – தணிகாசலம்,இசை – விஜய் ஆண்டனி,ஒளிப்பதிவு – ஜீவா ஷங்கர்

இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Response