அறுபது தொகுதிகள் ஆட்சியிலும் பங்கு – அதிமுக பாஜக உடன்பாடு?

இன்னும் ஆறு மாதங்களில் வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வேலைகளை எல்லா அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.

எல்லாக் கட்சிகளிலும் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருகின்றவாம்.
அப்பட்டியலில் இடமில்லை என்று உறுதியாகத் தெரிகிறவர்கள் கட்சி மாறுவார்கள். வருகிற வாரங்களில் கட்சி மாறுதல் அதிகரிக்கக்கூடும் என்கிறார்கள்.

இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையிலான மோதலில் பஞ்சாயத்து பண்ண வந்த பாஜக, அதோடு தன் காரியத்தையும் சாதித்துக் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.

அப்படி என்ன காரியம் சாதித்தது? 

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அறுபது தொகுதிகள் ஒதுக்கவேண்டும், தேர்தல் முடிந்தபின் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பின் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று சொல்லி அதற்கு அதிமுகவின் சம்மததைப் பெற்றுவிட்டதாம்.(அவங்க என்ன சம்மதிக்கறது?)

இதனால் பாமக மற்றும் விஜயகாந்த் கட்சிகளுக்கு மிகவும் குறைவான இடங்களே ஒதுக்க முடியும் நிலை என்றும் சொல்லப்படுகிறது. 

இதை அதிமுக தரப்பினர் சொன்னபோது அக்கட்சிகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இதனால் அடுத்தடுத்து பல பரபரப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.  பார்க்கலாம்.

Leave a Response