தமிழகத்தைச் சேர்ந்த பெண்மருத்துவரைப் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் அரசு

சமூக சேவைகளில் சிறப்பான பங்காற்றியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் சிங்கப்பூரில் கெளரவிக்கப்பட்டார்.
தமிழகத்தைச் சேர்ந்த 75 வயதான உமா ராஜன் , கடந்த 38 ஆண்டுகளாக சிங்கப்பூரில் சுகாரதாரத் துறையில் சேவையாற்றி வருகிறார். அவர், குழந்தைகள் நல மருத்துவ விடுதி உள்ளிட்ட பல மருத்துவ விடுதிகளை அங்கு நடத்தி வருகிறார்.
ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது குறித்து உமா ராஜன் தயாரித்த கையேட்டை, சிங்கப்பூரில் உள்ள மாணவச் சமூகத்தினர் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
அவருடைய சேவைகளைப் பாராட்டும் விதமாக “தப்லா-சமூக சாதனையாளர்’ என்னும் விருதை உமா ராஜனுக்கு சிங்கப்பூர் சட்டம், கல்வித் துறை இணை அமைச்சர் இந்திராணி ராஜா வழங்கினார்.
அந்த விருதுடன், பரிசாக வழங்கப்பட்ட ரூ. 6,60,000 தொகையைத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளுக்கு வழங்குவதாக உமா ராஜன் அறிவித்தார்.
இந்தவிருது சிங்கப்பூரில், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதைப் பெறும் முதல் பெண் உமா ராஜன். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சிறப்பு.

Leave a Response