துபாயில் வாழும் தமிழ்மொழி

துபாயின் அலுவல்மொழி அர்பிக், அங்கு அதிகம் பேசப்படுகிற மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. மலையாளத்துக்கும் அங்கே முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேசமயம் தமிழ் மொழிக்கு மரியாதை இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து ஓட்டுநர் வேலைக்காக நிறையப்பேர் அங்கு செல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழிலேயே தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இந்தியை கத்துக்கோ, தெலுங்கு கத்துக்கோ என்று பலரும் அறிவுரை சொல்கிறார்கள்.  தமிழ் மொழிக்கு சம்பந்தமே இல்லாத அரபு நாட்டில் சத்தமே இல்லாமல் தமிழ் வாழ்கிறது. ஓட்டுநர் உரிமம் எழுத்து தேர்வு தமிழில் எழுதலாம் என்கிற நிலை இருக்கிறது.

Leave a Response