தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சி – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு
பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……

2000-ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத் தொன்மையை எடுத்துக்காட்டும் அரிய பொருட்களும் தமிழ் பிராமி கீறல்களைக் கொண்ட மட்பாண்டங்களும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கிடைத்த
அழகன் குளம் சங்க காலத்தில் சிறந்திருந்த வணிக நகரமாகும்.

எகிப்து, கிரேக்கம், ரோமாபுரி போன்ற நாடுகளுடன் தமிழர்கள் வாணிபம் நடத்தியதற்கான சான்றாதாரங்களும் இங்கு கிடைத்துள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இவ்வூரில் 1990-ஆம் ஆண்டு முதல் இங்கு அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதைச் சுற்றிலும் உள்ள பல இடங்களிலும் அகழாய்வு நடைபெற உள்ளது. தமிழரின் தொன்மை நாகரிகத்தின் அடையாளமாகத் திகழும் அழகன் குளத்தின் அருகே இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக ஆழ் குழாய்க் கிணறுகளைத் தொண்டும் பணியினைத் தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக பழந்தமிழரின் தொல்லியல் சான்றுகள் அழியும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இதையொட்டி அமைந்துள்ள கடற்கரை கிராமங்களில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமும்
பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவே இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முன்வருமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response