கொரோனாவை ஒழிக்க மெகா ஹோமம்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கொரொனாவை ஒழிப்பதற்காகவும் மூதாதையர்கள் ஆன்மா சாந்தி அடையவும் 108 சுமங்கலிப் பெண்கள் முன்னிலையில் பொட்டல் குளம் ஐயப்ப சுவாமி மலையடிவாரத்தின் கீழ் மெகா ஹோமம் நடத்தப்பட்டது.

பி‌ன்ன‌ர் இந்நிகழ்வில் பி.டி.செல்வகுமார் பேசியதாவது :

கொரொனா என்னும் கொடிய நோயால் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் மிகவு‌ம் கஷ்டப்படுகிறார்கள்.

கொரொனா நோயை யாரும் வேண்டும் என்று கொண்டு வரவில்லை.ஆகவே கொரொனா யாருக்காவது வந்தால் அவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காதீர்கள்.

இன்று விவசாயம். கல்வி பொருளாதாரம்சிறு தொழில் போன்றவை கேள்விக்குறியாக உள்ளது.

இதை நாம் எப்படி மீட்டெடுப்பது என்ற அக்கறையை விட்டுவிட்டு மதம் இனம் ரீதியான சண்டையில் ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சியில் மீண்டும் சிக்கி கொள்வோமா என்ற அச்சம் எல்லோரிடத்திலும் இருக்கிறது.

எப்படி இந்த பொருளாதார பிரச்சனையில் இருந்து நாம் மீண்டு வரப் போகிறோம் என்பதே மிகப் பெரிய சவாலாக உள்ளது.

கஷ்டத்திலும் வறுமையிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நாம் கை கொடுத்து உதவ வேண்டும் என்று பேசினார்.இந்தியா முதன்மை நாடாக மாற வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒற்றுமையோடு பயணப்பட்டால் தான் வெல்ல முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வின்போது, காலை சிற்றுண்டி வழங்க உதவி செய்த ஏபிஎம் செல்வகுமார் அவர்களுக்கு பட.செல்வகுமார் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் ஏபிஎம். செல்வகுமார். கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன்.பேராசியர் ரெங்கநாயகி,அழகை துரைராஜ் கோவில் கோவில் நிர்வாகி தியாகராஜ சுவாமி , ஜோசப் சந்திரன், கலப்பை சிவ பன்னீர் கிப்சன் குமரி மாவட்ட கலப்பை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Response