தன் படைப்பின் மூலம் விழிப்புணர்வு – பா.விஜய்யைப் பாராட்டலாம்

ஸ்ட்ராபெர்ரி படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கும் பா.விஜய், இன்றைக்குச் சமுதாயத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் நடக்கும் முக்கியமான கொடுமையைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்  பேரரசர், பேரரசிகளாக இருக்கும் குழந்தைகள் கல்வியறிவு பெற பள்ளிக்குப் போகும் போது என்ன நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கல்விக்கூடங்களின் பொறுப்பற்ற தன்மைகளை வெளிப்படுத்திக் கண்டித்திருப்பதோடு, இன்றைய கல்வி முறை குறித்தும் விமர்சனம் செய்திருக்கிறார்.  கவிஞர், இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையெல்லாம் தாண்டி பொறுப்புள்ள தந்தையாக, குடும்பத்தலைவராக , சமூக ஆர்வலராக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.  தான் பெற்ற புகழை வைத்து இந்தச் சமூகத்துக்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று நினைத்த அவரைப் பாராட்டலாம்.

அதேசமயம் படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் நல்ல தமிழ்ச் சொல்லைப் பெயராக்கியிருக்கலாமே என்கிற கேள்வியும் வருகிறது.

Leave a Response