ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரான, திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென சொல்லப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை தெரிவித்தது.

Leave a Response