மருத்துவர் இராமதாசு மகள் நிறுவனத்தின் விளம்பரதூதரானார் நடிகை நமீதா

நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து  புதிய தோற்றத்தில்  காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை.

இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா பத்திரிகையாளர்களிடம்    பகிர்ந்து கொண்டார். இதற்கான  சந்திப்பு  நிகழ்ச்சியில் நமீதா பேசும் போது
” என் எடைஅதிகமாகிக்கொண்டே இருந்தது. படவாய்ப்புகளும் குறைந்து விட்டன.
நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன்.இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை.எடையைக் குறைக்க எவ்வளவோ விதத்தில் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள்  எல்லாம் பின்பற்றினேன். ஆனால் பலனில்லை.

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன் எப்படியாவது குறைத்தாக வேண்டும், வாழ்வா சாவா என்கிற போராட்டம். அப்படிப்பட்ட சூழலில்தான் சாக்ஷி வெல்னஸ் பற்றி . தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன்.

எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடைமட்டும் குறையவேயில்லை. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன்.ஆரம்பத்தில் அவர்கள் மீது நம்பிக்கையில்லை. முதலில்  ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது, பிறகுதான் நம்பிக்கை வந்தது. இப்படி முன்றே மாதங்களில் சுமார் 20 கிலோ எடை குறைந்தது. அவர்கள் சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை சரிவர பார்த்துக் கொண்டார்கள். நம்பிக்கையையும் ஊக்கமும் கொடுத்தார்கள். இப்போது நான் நம்பிக்கையுடன்
இருக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். அவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன். (இந்த நிறுவனம் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு மகள் கவிதா வால் நடத்தப்படுகிறது)

Leave a Response