சோனியாகாந்தியின் அறிவிப்பு – தொழிலாளர்கள் மகிழ்ச்சி பாஜக பேரரதிர்ச்சி

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், மற்றும் சுற்றுலா சென்று இருந்தவர்களும் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .

இந்த நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு சிறப்புத் தொடர்வண்டிகளை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால் சில சிறப்புத் தொடர்வண்டிகளில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து சோனியாகாந்தி எழுதி உள்ள கடிதத்தில் நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் தொடர்வண்டிப் பயணச் செலவை காங்கிரசுக் கட்சி செலுத்தும் என்று கூறி உள்ளார்.

சோனியா காந்தி எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது…..

நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் தொடர்வண்டிப் பயணச் செலவை காங்கிரசு ஏற்கும்

இது எங்கள் தேசிய வீரர்களின் சேவையில் இந்திய தேசிய காங்கிரசின் சிறிய பங்களிப்பாகவும், அவர்களுக்காக ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கவும் காங்கிரசி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்

மேலும் கடிதத்தில் நமது தொழிலாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமானப் பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் நமது அரசாங்கம் ​​போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.100 கோடியைச் செலவு செய்கிறது.

குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக, தொடர்வண்டி அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்கிறது. அப்படியானால், நமது நாட்டின் தொழிலாளர்களுக்கு இலவச தொடர்வண்டிப் பயணத்தை, இந்த நேரத்தில் கடுமையான துயரத்தில் ஏன் கொடுக்க முடியாது?

ஊரடங்கு குறித்து மத்திய அரசு முன் அறிவிப்பு நோட்டீஸ் அறிவிப்பைக் கொடுக்கவில்லை, எனவே தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இன்றும் கூட, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் “நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரும்புகின்றனர், ஆனால் பணம் அல்லது இலவசப் போக்குவரத்து இல்லை

கவலைக்குரிய விசயம் என்னவென்றால், இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசும் தொடர்வண்டி அமைச்சும் பயணச்சீட்டுகளுக்குக் கட்டணம் வசூலிக்கின்றன.

காங்கிரசின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க மத்திய அரசு,தொடர்வண்டி அமைச்சும் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்திய தேசிய காங்கிரசு, ஒவ்வொரு மாநில காங்கிரசுக் கமிட்டியும் ஒவ்வொரு ஏழைத் தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் தொடர்வண்டிப் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும் என்று சோனியா காந்தி அதில் கூறி உள்ளார்.

சோனியாகாந்தியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைச் சற்றும் எதிர்பாராத பாஜக பேரரதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Response