நாளை காலை 5 மணி வரை தொடரும் ஊரடங்கு – 31 ஆம் தேதி வரை இரயில்கள் இரத்து

இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி காலை 7 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை மக்கள் வீட்டோடு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசியப் பணிகள் தொடர எந்தத் தடையும் இல்லை என்றும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை வரும் 31 ஆம் தேதி வரை இரத்து செய்யப்படுவதாக இந்திய தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.

Leave a Response