வேலி கருவேல மரங்களை அழிக்க முடிவெடுத்த தமிழக அரசு, ஈரோடு மாவட்டத்தில் தொடக்கம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் பசுமை இயக்கத்தின் சாh;பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும்; விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப.,தலைமையில் சந்தை பேட்டை வளாகத்தில் 16.08.2015 அன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  தோப்புவெங்கடாசலம்,மரக்கன்றுகளை நட்டதோடு நீராதாரத்தை அழித்து வரும் வேலி கருவேல மரங்களை அழிக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பேசுகையில்…
ஈரோடு மாவட்டம், கோவை மாவட்டத்தை விட வெயிலின் தாக்கம் கூடுதலாக உள்ளது. இந்த நிலைமை மாற்றி அதிக மரங்களை நட்டு குளுமையான மாவட்டமாக மாற்ற பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சர் அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மரங்களை நட உத்திரவிட்டு மரங்கள் நடும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 67 இலட்சம் மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுச்சூழல் துறையின் மூலமாக மட்டும் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 33 சதவீதம் காடுகள் இருந்த நிலையில் இப்பொழுது காடுகளின் பரப்பளவு 13 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பருவம் மாறி மழை பெய்கின்றது. பருவம் மாறி மழை பெய்ததால் விவசாயத்திற்கு பயனின்றி போகின்றது. மரங்கள் இருந்தால் மட்டுமே பருவமழை முழுவதுமாக கிடைக்கும். ஆகவே பொதுமக்கள், மாணவ, மாணவியா;கள் மரம் நட்டு பராமாpப்பதை தங்கள் இலட்சியமாக கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் பெருந்துறை பகுதியில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரம் நடும் திட்டத்தில் பசுமை இயக்கத்தின் சாh;பாக சென்ற ஆண்டு 19,500 மரங்கள் நட்டு சாதனை செய்யப்பட்டது. இவற்றில் 5,000 மரக்கன்றுகளை பசுமை இயக்கத்தினரே நேரடியாக பராமாpத்து வருவது பாராட்டுக்குhpயதாகும்.

மரங்கள் காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சு வாயுக்களை எடுத்துக்கொண்டு நமக்கு உயிர் வாழ்வதற்கான ஆக்ஸிஜனை தருகின்றன. மரங்கள் நடுவதுடன் இல்லாமல் தண்ணீரை விரைவில் உறிஞ்சி வீணாக்கும் வேலி கருவேல மரங்களை அழிக்கும் பணியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். வேலி கருவேல மரங்கள் பூமியின் ஆழத்தில் இருந்து தேக்கும் சிறிதளவு நீரைக்கூட உறிஞ்சி நீர்த் தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளன.  இவ்வாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Response