கொரோனாவுக்கு மூலகாரணம் அமெரிக்காவில் வந்த காய்ச்சல்தான் – சீனா குற்றச்சாட்டு

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூகான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வூகான் நகரமே தனிமைப்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனா காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அமெரிக்கா கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அதனால்,
அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசியப பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரைன், சீனா வுகானில் இருந்து பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தியது.

அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களைச் செலவிடவேண்டியதாயிற்று என்றார்.

சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் ஓ பிரைன்

இது தொடர்பாக சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

பெருந்தொற்று நோயை வூகானுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க இராணுவமாகத்தான் இருக்கக் கூடும்.

அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் சிலருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது. காய்ச்சலால் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை பேருக்கு கோவிட்-19 உடன் தொடர்பு உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொடர்பாக அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள மோதல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response