தொடர்ந்து தமிழைக் கொச்சைப்படுத்தும் விஜய் அனிருத் – கடும் விமர்சனங்கள்

விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

விஜய் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைப் பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஒரு குட்டிக் கதை’ காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

பெரும்பாலும் ஆங்கிலத்தில் பாடல் இருக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்தன.

இந்நிலையில், நேற்று (மார்ச் 10) மாலை ஐந்து மணிக்கு அப்படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடல் வெளியானது. வாத்தி கமிங் எனும் அந்தப்பாடலும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.

இதர்குக் கடும் விமர்சனங்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று…

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் பாடல் ஒன்றைக் கேட்டேன்,

பாடலைக் கேட்ட நொடியில் தோன்றியது ஒன்றுதான், தமிழ்த்திரையைப் பீடித்த சனியன்
விஜய், அனிருத் என்று.

பாடல் என்கிற பெயரில் தமிழை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்த முடியுமோ
அப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்.

சென்னை வட்டார மொழி தமிழே அல்ல, அவை பலமொழி கலப்பால் சிதைவால் உருவான ஓர் பேச்சுவழக்கு.
அதுதான் சென்னை தமிழர்களின் அடையாளம் என அடையாளப்படுத்தும் அதனை கொண்டாடுவதும்
அம்மாவை ங்கோத்தா என்பதற்கு சமம்தான்.

இளம்வயதில் நான் பார்த்து ரசித்த ஓர் நடிகன். தொடர்ந்து தனது படங்களின் தலைப்பிலும், பாடல்களிலும் தமிழைக் கொச்சைப்படுத்தும் விஜய் போன்றோர் படங்களைப் புறக்கணிப்பதோடு, இதுபோன்ற திரைத்துறையினரை கண்டித்துப் போராட தமிழர் அமைப்புகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு உட்பட பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response