இராணுவதளபதி அமெரிக்காவில் நுழைய தடை – சிங்கள அரசு அதிர்ச்சி

2009 ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியாக இருக்கும் சாவேந்திரா சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை மூலமாக விளக்கிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ ஐ.நா.சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் இலங்கையின் இராணுவத் தளபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, உண்மையானவை என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சில்வாவும் அவர் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சில்வாவுக்கு ராணுவத்தில் உயர் பொறுப்பை அளித்த இலங்கை அரசுக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அமெரிக்காவும் ஐநா.சபையும் அமைதிக்கான படைப்பிரிவிலிருந்து இலங்கையை நீக்கி விட்டன.

சிங்கள இராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்திருப்பது சிங்கள அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response