ஈரோடு மாவட்டத்தில், ஞெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை போட்ட முன்னோடி கிராமம்

ஈரோடு மாவட்டம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தடைசெய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பரமு(எ) ஆறுமுகம்தலைமை தாங்கினார். துணைதலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப் பட்டது. மேலும் சிவகிரி பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரோன் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் இதர பொருட்கள் பயன் படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், ஆகஸ்ட்- 10 ம் தேதி முதல் தடை அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீறி பயன் படுத்தினால் ரூ.ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள், மற்றும் மாதிரி துணிப்பைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் வளர்கங்கை சண்முக சுந்தரம், நாச்சிமுத்து, கூட்டுறவு சங்கதலைவர் பிரபாகரன், துணைதலைவர் கோபிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அலுவலக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Leave a Response