மாநிலங்களவை உறுப்பினர் பதவி – ஈபிஎஸ் ஓபிஎஸ் மோதல்?

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, டி.கே.ரங்கராஜன், ஏ.கே.செல்வராஜ், திருச்சி சிவா, விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யலாம்.

அதிமுகவில் இந்தப் பதவிகளைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறதாம்.ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர்கள் இந்தப் பதவியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தமிழக அமைச்சர்கள் யாரும் இல்லை. அதே போல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இல்லாத நிலை. இதனால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்களவை உறுப்பினர் பதவியாவது வழங்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கேட்கின்றனராம்.

அதிமுகவில் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோர் தத்தம் ஆதரவாளர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக்க முயல்வதாலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தர வேண்டும் என்று தற்போது கோரிக்கை வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response