பிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயாண்ட், தனது மகள் மற்றும் மூவருடன் தனி ஹெலிகாப்டரில் தவுசண்ட் ஓக்ஸ்சில் உள்ள மாம்பா அகாடமிக்கு பயிற்சி மேற்கொள்ளச் சென்றுள்ளார். அப்போது கலிஃபோர்னியா மாகாணத்தின் கலாபசாஸ் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

இதில் பயணித்த கோப் பிரயாண்ட் உட்பட 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அவரது மனைவி மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோப் பிரயாண்ட் உயிரிழப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டரில், கோப் பிரயாண்டின் இழப்பு கோரமானது என பதிவிட்டுள்ளார். மேலும், கோப் பிரயாண்டின் மறைவுக்கு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் கோப் பிரயாண்டின் இழப்பு ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Response