தமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி

தமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குநரான சோழன் மு.களஞ்சியத்தை யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்த மாவீரர் நாளுக்கு அழைத்திருந்தார்கள். அதன் பேரில் கடந்த 27 ஆம் தேதி கொழும்பு சென்றார்.

அங்கிருந்து பலாலிவிமானம் நிலையம் சென்றார். 50 பேர் உட்காரும் விமானம் அது. உள்நாட்டு விமான சேவை எல்லாம் அங்கே ராணுவ விமானங்கள்தான்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவே முடிந்தது. தலைவர்கள் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். மாவீரர் நாள் குறித்து செய்தியாளர் சந்திப்பையும் எதிர்கொண்டார். முக்கிய இடங்களையும் பார்த்தார்.

இது கோத்தபயராஜபக்சேவின் ராணுவத்திற்கு பொருத்துக்கொள்ள முடியவில்லை. முகளஞ்சியம் தங்கியிருந்த ஓட்டலில் ராணுவத்தைக் குவித்து, வரவேற்பு அரையில் உட்கார வைத்து ‘நீ என்ன #பாகிஸ்தானியா’ என்று விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அதையும் எதிர்கொண்டு, நாடு திரும்ப பலாலி விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து அதே சிறிய ரக விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டார்.

ஆனால் அந்த விமானம் திருகோணமலையில் இறக்கப்பட்டது. உள்ளே இருந்த மு.களஞ்சியத்தை விமானப்படை வீரர்கள் வந்து வலுக்கட்டாயமாக இறக்கிச் சென்று ஒரு அறையில் அடித்து நெட்டித் தள்ளினார்கள்.

அரை மணி நேரம் கழித்து ராணுவம் வந்தது.

“உங்கள் #தலைவன் யார்? புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டமைக்கத்தான் இங்கே வந்தீர்களா? சீமான்தான் உங்கள் தலைவனா? அவர் சொல்லித்தான் இங்கே வந்தீர்களா? உங்கள் தலைவர் உயிரோடு இருப்பதாக சொல்கிறீர்களே, எங்கே இருக்கிறார்? தமிழ்நாட்டிலா?. உங்களின் திட்டம் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு தோள் பட்டைக்கு கீழே, இரண்டு கைகளிலும் துப்பாக்கி கட்டையால் அடித்துள்ளார்கள்.

ஒருவன் பலம்கொண்ட மட்டும் கழுத்து நரப்புப் பகுதியில் ஓங்கி குத்தியிருக்கின்றான். களஞ்சியத்திற்கு மூச்சுத்தினறல்- மயக்க நிலை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி தன் செல்போனை எடுத்து நோண்டி, அதில் சீமானோடு களஞ்சியம் ஒன்றாக இருக்கும் படத்தைக் காட்டி, ‘இவன்தானே உங்கள் தலைவன். இவர் சொல்லித்தான் நீங்கள் இங்கு வந்தீர்களா’? என்றெல்லாம் கேட்டுள்ளார்கள்.

அந்த புகைப்படம் இலங்கை முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அனைத்தையும் துள்ளியமாக திரட்டி வைத்துக்கொண்டு, இப்படி பொருந்தா கேள்விகளை கேட்டு அடித்துள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் விளக்கம்- பதில் அளித்த இயக்குநர் மு.களஞ்சியம்,…

“என்னை முறைப்படி இந்திய தூதரகத்தில் ஒப்படைத்து- என்ன கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள், பதில் தருகின்றேன்’ எனக் கூறியுள்ளார். சிங்கள ராணுவத்திற்கு இந்தியா என்றால் ……சமானம் போலும். மதிக்கவேயில்லை..

ஒரு வழியாக நள்ளிரவு ஒரு மணிக்கு, ஐந்து பேர் பயணிக்கும் ஒரு குட்டி விமானத்தில் நான்கு ராணுவ வீரர்களோடு வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டார். ‘மேலிருந்து தள்ளிவிட்டு கொன்றுவிடுவார்களோ’ என்றவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஒரு வழியாக கொழும்பு விமான நிலையத்தில் கொண்டு வந்த இறக்கிவிட்டு மோசமாக திட்டி வழியனுப்பி வைத்துள்ளது கோத்தபய #ராணுவம்.

விமானத்தில் பயணிக்கும் போதே, கழுத்துப் பகுதி மோசமாக வலித்துள்ளது. தவிர அந்த இரண்டு கைகளையும் தூக்க முடியவில்லை. திருச்சியில் இறங்கியதும் நேராக மருத்துவமனைக்குச் சென்று 3- நாள் மருத்துவமனையில் படுத்து ஓரளவு தேறிய நிலையில் சென்னை வந்து அப்போல்லோ மருத்துவமனையில் சோதனைக்காக காத்திருக்கின்றார்..

கோத்தபய ராஜபக்சேவின் ராணுவ ஆட்டத்தை இந்த உலகம் இனியாவது புரிந்துகொள்ளட்டும்.

– பா.ஏகலைவன்

Leave a Response