அயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரியதென்றும் அங்கு இராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்…..

மிக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் மத மோதல்களுக்குக் காரணமாக இருந்த அயோத்தி நிலப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்தப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வழி கோலவில்லை.

மாறாக மேலும் பல இடங்களில் இத்தகைய பிரச்னைகள் முளைத்தெழுவதற்கே வழி வகுக்கும்.

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைந்திருக்கக் கூடிய மத சார்பற்றத் தன்மையை நிலை நிறுத்துவதற்கு மாறாக எதிர் விளைவுகளையே இந்தத் தீர்ப்பு உருவாக்கிவிடும் என்பதே சமுதாய நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்டோரின் கவலையாகும்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response