லாரி ஓட்ட படிப்பு தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு

சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,

தற்பொழுது போக்குவரத்து வாகனங்களை இயக்க மத்திய மோட்டார் வாகன விதியில் உள்ள 8 ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற கல்வித் தகுதி தேவையில்லை என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படிக்காதவர்கள் லாரி மற்றும் கனரக போக்குவரத்து வாகனங்களை ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்தனர். அதற்கு பாதிப்பு ஏற்படும் விதமாக லாரி ஓட்டவேண்டுமென்றால் எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் எனச் சொல்லி ஏராளமானோர் வயிற்றிலடித்தது மத்திய அரசு.

இப்போது அதை திரும்பப் பெற்றிருப்பதால் கல்வி கற்க முடியாதவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response