காங்கிரசு புகார் எதிரொலி – சீமான் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அந்தத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் முடிந்து, அடுத்தகட்டமாக கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில்,அக்டோபர் 12 ஆத் தேதி சனிக்கிழமை பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தியதாகவும், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையொட்டி காங்கிரசுக் கட்சியினர் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.அதனால், ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது 2 பிரிவுகளில் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response