மோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை

சீன அதிபர் வருகையையொட்டி சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் குப்பைகளை அப்புறப்படுத்தும் காணொலி ஒன்று வெளியானது.

ஏராளமான விமர்சனங்களை அந்த காணொலி சந்தித்து வருகிறது.

அந்நிகழ்வைக் குறிப்பிட்டு இன்று ஒரு அறிக்கை வெளீயிட்டிருக்கிறார் மருத்துவர் இராமதாசு.

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்:
கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்!

என்று தொடங்கும் அந்த அறிக்கையின் முதல்பகுதியில்,

சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்ததைக் கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்து 10 மாதங்களாகியும் அவை ஒழிக்கப்படவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.

என்று கூறியிருக்கிறார் மருத்துவர் இராமதாசு.

தமிழக அரசாங்கம் கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைச்சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் மருத்துவர் இராமதாசு.

அந்த நீண்ட அறிக்கையின் கடைசிப்பகுதியில்,

அத்தகைய உலகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைச் சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர் புட்டிகள், எண்ணெய் – பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response