சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- சுபவீ அழைப்பு.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்…
அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, தலித் மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.
இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து, 09-07-2015 வியாழன் காலை 10 மணிக்கு, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சாதி வெறியை எதிர்க்கும் மனித நேயர்கள், ஜனநாயகவாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response