
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (25-09-2019) அறிவித்துள்ளார் .
வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு;
விக்கிரவாண்டி: கு.கந்தசாமி,
சமூகச் செயற்பாட்டாளர்
நாங்குநேரி: சா.ராஜநாராயணன்,
இளங்கலை வரலாறு
காமராஜர் நகர்(புதுச்சேரி): பிரவினா மதியழகன்,
குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


