மோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்

இன்று தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்த நாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றுதான் பிரதமர் நரேந்திரமோடிக்கும் பிறந்தநாள். அதனால் இந்தியா முழுக்க அவரது கட்சியினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாடிவருகின்றனர்.

இதனால் இன்று காலையில் டிவிட்டரில் முதல் ஐந்து இடங்களிலும் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் குறிச்சொற்களே நிறைந்திருந்தன.

ஒன்பது மணிக்கு மேல் மோடியைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் வந்துவிட்டார் பெரியார்.

மறைந்து நாற்பத்தாறு ஆண்டுகள் ஆன பின்பும் நடப்பு பிரதமரை விட இந்திய அளவில் செல்வாக்குப் பெற்றவராக பெரியார் திகழ்கிறார் என்பதற்கு இது சிறந்த சான்று என்று பெரியார் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இன்றைய பாஜக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பையும் இது பிரதிபலிக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response