பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் முன்கூட்டியே அரசு வெளியிட்டது.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் இதுவரை இருந்த மொழிப்பாடங்களில் தலா 2 தாள்கள் என்ற நடைமுறையை மாற்றி இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு முதல் மொழித்தாள்களில் தலா ஒரு தாள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதில்….

மாணவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், ஆசிரியர்களை அதிக அளவில் கற்பித்தல், கல்வி மேம்பாட்டு பணியில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் இந்த கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கான இரண்டு தாள்களாக தேர்வு எழுதும் நடைமுறையை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்தும் வகையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.

இதன்படி பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியாகும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை – மார்ச் 27 – மொழிப்பாடம்
மார்ச் 28 – விருப்ப மொழிப்பாடம்
மார்ச் 31 – ஆங்கிலம்
ஏப்ரல் 3 – சமூக அறிவியல்
ஏப்ரல் 7 – அறிவியல்
ஏப்ரல் 13 – கணக்கு

Leave a Response