தோனி குறித்து மனைவி விளக்கம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

இந்திய அணியின் சாதனைத் தலைவராக விளங்கியவர் எம்எஸ்.தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தோனி.
அதன்பின் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், இராணுவத்தில் பயிற்சி பெறச் செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ்.தோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அந்தப் போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டார்.

இதற்கிடையில்,நேற்று இரவு 7 மணி அளவில் தோனி செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

ஆனால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக வெளியான தகவல் தவறானது என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறி உள்ளார். ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ-யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தோனியின் மனைவி சாக்‌ஷி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வீண் வதந்தி எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் தோனி ஒய்வு குறித்த சர்ச்சைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response