கே.எல்.ராகுல் நீக்கம் – இந்திய அணி அறிவிப்பு

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய மட்டைப்பந்தாட்ட அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஐந்து நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்தப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன் வீவரம்….

விராட் கோலி (அணித்தலைவர்), மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்), அனுமன் விகாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஆவர்.

அண்மையில் மேற்கிந்தியத் தீவில் நடந்த 2 ஐந்து நாள் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக கே.எல். ராகுல் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response