அதெல்லாம் சரி இதையும் செய்யுங்கள் – தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்
விடுத்துள்ள அறிக்கையில்…

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல்நாள் அன்று
தமிழ்நாடு அமைந்த நாளாக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருப்பதை
வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இது நிறைவேற்றப்படுவது மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காரைக்கால் அம்மையார், வள்ளலார், வீரமாமுனிவர், பாவாணர் ஆகியோரின் பெயர்களில் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் பாண்டியராசன் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் அவர்கள் இளமைப் பருவத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவிடமாக ஆக்குவது என 2003 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தது.

உயர்நீதிமன்றமும் இது குறித்த வழக்கில் அரசே செய்யலாம் என தீர்ப்பளித்துள்ளது. எனவே, வள்ளலார் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக ஆக்குமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Response