கிரிக்கெட்டிலும் காவி – மோடி அரசுக்கு எதிர்ப்பு

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்து தொடரில், எல்லா அணிகளும் மாற்று உடை (ஜெர்சி) அறிவித்து அதை ஒரே நிற உடை (ஜெர்சி) கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன.

இதில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 தொடருக்கான ஜெர்சியில் இருந்து புதிய டிசைன் தேர்வு செய்து வடிவமைக்கப்பட்டதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அதை காவியாக்கியிருக்கிறார்கள்.

Leave a Response