கமல் கொடுத்த விருந்து – கட்சியினர் அதிருப்தி

நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிட்டது.

இத்தேர்தலில் சுமார் பதினைந்து இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று, போட்டியிட்ட முதல் தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடித்தது.

இதைக் கொண்டாட சென்னையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அந்நிகழ்ச்சியில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம்.

நிகழ்வில் கமல் எல்லோருடனும் உரையாடுவார் என்றும் சொல்லப்பட்டதாம்.

அதனால் பலரும் ஆர்வமுடன் நிகழ்வில் கலந்து கொண்டாராம்.

நிகழ்வு நாளன்று சொன்ன நேரத்தைவிடத் தாமதமாக வந்தாராம் கமல். வந்தவுடன் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, நல்ல விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் விருந்துண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கமல் கிளம்பிவிட்டாராம்.

தன் கட்சியினருக்கு நல்விருந்து அளித்த மகிழ்வில் கமல் போயிருக்கிறார்.

கமல் தங்களுடன் நீண்ட நேரம் உரையாடுவார் என்று ஆசையாய் வந்தவர்களுக்கு ஏமாற்றம். நாங்கள் உணவுக்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் எனப் புலம்பிச் சென்றனராம்.

Leave a Response