மும்பை அணிக்கு அடித்த அதிர்ஷ்டம் – சூப்பர் ஓவர் கிடைத்தது

ஐபிஎல் 12 – ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 51 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 69 (58) ரன்கள், ரோகித் சர்மா 24 (18) ரன்கள், சூர்யகுமார் யாதவ் 23 (17) ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில், சயத் கலீல் அகமது 3 விக்கெட், முகமது நபி மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது.

இறுதியில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்தது.

இதனைதொடர்ந்து 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி விக்கெட் இழப்பின்றி (9 ரன்கள்) இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 71 (47) ரன்கள், முகமது நபி 31 (20) ரன்கள், விருத்திமான் சஹா 25 (15) ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா, கிருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கடைசி நிமிடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த சோகத்தில் ஐதராபாத் வீரர்கள் இருந்தனர்.

Leave a Response