தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சபாநாயகர் – புதிய குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேரும் அ.ம.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர திமுக மனு அளித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள்முலில் இருக்கும்போது do’s and don’ts பட்டியல் உள்ளது

நடத்தை விதிகளின் நோக்கம் வாக்காளர் மனநிலையைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடுவது தடுக்கப்பட்டு உள்ளது.

தகுதி நீக்க நோட்டீஸ் வாக்காளர் மனநிலையைப் பாதிக்கும் செயல்.

எனவே சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தேர்தல் நடத்தை விதியை மீறிச் செயல்பட்டுள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது அதிமுகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response