10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் – திருப்பூர் முதலிடம் நாமக்கல் மூன்றாமிடம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ – மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். .திருப்பூர் மாவட்டத்தில் அதிகமான மாணவ – மாணவியர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ல்தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு மாநிலம்முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

அதன்படி, மொத்தம், 95.2 சதவீதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 97.0 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்

1. திருப்பூர் 98.53 சதவீதம்

2. இராமநாதபுரம் 98.48 சதவீதம்

3. நாமக்கல் 98.45 சதவீதம்

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.inமற்றும் www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர பள்ளிகளுக்கு மின் னஞ்சல் மூலமும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை அறியலாம்.

தேர்வர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப் பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து மாணவர்கள் மே மாதம் 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response