கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆந்த்ரே ரஸ்ஸல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். யாரும் எதிரபாராத வகையில் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 97 ரன் எடுத்து அணிக்கு மரியாதை ஏற்படுத்தினார்.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் ரியான் பராக் அதிகபட்சமாக 31 பந்துகளில் 47 ரன் எடுத்தார்.