ஏபிடிவில்லியர்ஸ் அபார ஆட்டம் – பெங்களூரு அணி அதிரடி வெற்றி

ஏப்ரல் 24 அன்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைவர் அஸ்வின் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில், கே.எல்.ராகுல் 42 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார்.

ஆனாலும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே குவித்து 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு அணியின் ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் எடுத்த 82 ரன்கள், மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸின் 44 ரன்களும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.

Leave a Response