ஐதராபாத் அதிரடியை மீறி சென்னை அபார வெற்றி

ஐபிஎல் 12 – ஏப்ரல் 23 அன்று சென்னையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். இரண்டாவது ஓவரில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மனிஷ் பாண்டே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.அவருடன் வார்னரும் சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

வார்னருக்கு முன்பே அரைசதம் அடித்தார் மனிஷ்.வார்னர் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஐதராபாத் அணி.

பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சனின் அதிரடி ஆட்டத்தால்
வெற்றி பெற்றது.வாட்சன் 96 ரன்கள் எடுத்தார்.

இதனால் 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது சென்னை.

இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்தது.

Leave a Response