4 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

அத்தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட நேற்று முன்தினம் விருப்பமனு பெறப்பட்டது. விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினமே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.

நேற்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் விவி செந்தில்நாதன், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கே மோகன்,
சூலூர் தொகுதியில் கந்தசாமி,
திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ் முனியாண்டி

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

Leave a Response