குண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை

கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்களில் நேற்­றுக் காலை­யில் அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­தல் மற்­றும் குண்­டுத் தாக்­கு­தல்­க­ளில் 228 அப்­பா­விப் பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

தேவா­ல­யங்­கள் மற்­றும் உல்­லாச விடு­தி­களை இலக்கு வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பி­னர் 8 இடங்­க­ளில் இந்­தத் தாக்­கு­தல்­களை நடத்­தி­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கொல்­லப்­பட்­ட­வர்­க­ளில் 32 பேர் வெளி­நாட்­ட­வர்­கள். மூவர் பொலி­ஸார். 500க்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­த­னர். நாட்­டையே உலுக்­கிய இந்­தத் தாக்­கு­த­லைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

யேசு­வின் உயிர்த்த ஞாயிறு தினத்­தைக் கிறிஸ்­த­வர்­கள் கொண்­டா­டிக் கொண்­டி­ருந்­த­போது தேவா­ல­யங்­க­ளில் தற்­கொ­லை­யா­ளி­கள் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று பொலிஸ் தக­வல்­கள் கூறு­கின்­ற­னர்.

மிக மோச­மான இந்­தத் தாக்­கு­தல்­க­ளால் தேவா­ல­யங்­கள் கொலைக் களங்­க­ளா­கக் காட்­சி­ய­ளித்­தன. இறந்­த­வர்­க­ளின் உடல்­கள் எங்­கும் சித­றிக் கிடந்­தன. கூரை ஓடு­கள் நொறுங்கி வீழ்ந்­தி­ருந்­தன. காய­ம­டைந்­த­வர்­க­ளி­ன­தும் ஏனை­ய­வர்­க­ளி­ன­தும் ஓலங்­க­ளால் அந்த இடங்­கள் நிரம்­பிக்­கி­டந்­தன.

மேலும் 3 தாக்­கு­தல்­கள் நட்­சத்­திர உல்­லாச விடு­தி­க­ளில் இடம்­பெற்­றது. அவற்­றில் ஒன்­றில் தற்­கொ­லைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­ட­தைப் பொலி­ஸார் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

மற்­றொன்­றில் வைக்­கப்­பட்­டி­ருந்த குண்டு வெடித்­தது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர். மூன்­றா­வது விடு­தி­யில் இடம்­பெற்­றது தற்­கொ­லைத் தாக்­கு­தலா அல்­லது குண்­டுத் தாக்­கு­தலா என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

தற்­கொ­லைத் தாக்­கு­தல்­கள் உட்­ப­டக் குண்­டுத் தாக்­கு­தல்­கள் இடம்­பெற்­றுள்­ளன என்­பதை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்த்­த­ன­வும் பொலிஸ் பேச்­சா­ள­ரும் ஊட­கங்­க­ளி­டம் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

தாக்­கு­தலை நடத்­தி­யோர் குறித்து பொலி­ஸாரோ, ஆட்­சி­யா­ளர்­களோ, படைத்­து­றை­யி­னரோ உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு எத­னை­யும் வெளி­யி­ட­வில்லை. எனி­னும் ஈராக் மற்­றும் சிரி­யா­வுக்­கான இஸ்­லா­மிய அரசு என்­கிற தீவி­ர­வாத அமைப்­பின் இலங்கை உறுப்­பி­னர்­களே இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று பொலிஸ் மா அதி­பர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

தாக்­கு­தல் தொடர்­பில் நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கும் கூட்­டம் நேற்­றி­ரவு நடை­பெற்­றது. அதி­லேயே பொலிஸ் மா அதி­பர் இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தார் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்.

நீர்­கொ­ழும்­பில் முதல் தாக்­கு­தல்
நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்டி புனித செபஸ்­ரி­யன் தேவா­ல­யத்­தில் காலை 8.45 மணி­ய­ள­வில் முதல் தாக்­கு­தல் இடம்­பெற்­றது. உயிர்த்த ஞாயிறு ஆரா­த­னை­கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென பெரும் ஓசை­யு­டன் வெடிப்­புச் சத்­தம் கேட்­ட­தா­க­வும் அந்த இடமே அதிர்­வுக்­குள்­ளாகி தாம் தூக்கி வீசப்­பட்­ட­னர் என்­றும் உயிர் தப்­பி­ய­வர்­கள் தெரி­வித்­த­னர்.

வீழ்ந்து கிடந்த தம் மீது பொல பொல வென கூரை ஓடு­க­ளும் பார­மான வேறு பொருள்­க­ளும் வீழ்ந்­தன என்­றும் அவர்­கள் கூறி­னர். கதி­க­லங்­கிப்­போன மக்­கள் கூட்­டம் கூச்­ச­லிட்­ட­வாறு தேவா­ல­யத்­தி­லி­ருந்து தப்பி வெளி­யேற முண்­டி­ய­டித்­த­போது பல­ரது உடல்­கள் அங்கே வீழ்ந்து கிடப்­ப­தை­யும் பல உடல் பாகங்­கள் ஆங்­காங்கே சித­றிக் கிடப்­ப­தை­யும் தாங்­கள் கண்­ட­னர் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

குண்­டு­கள் நிரம்­பிய பொதியை எடுத்து வந்த ஒரு­வர்­அ­த­னைத் தேவா­ல­யத்­தின் உள்ளே வெடிக்க வைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது. இந்­தத் திடீர் குண்­டு­வெ­டிப்­பால் ஆல­யத்­தின் இருக்­கை­கள், கூரை­கள் என்­பன சுக்கு நூறாக வெடித்­துச் சித­றின.

ஆல­யத்­தின் சொரூ­பங்­க­ளும் நொருங்­கின. நொடிப் பொழு­தில் எல்­லா­வ­மும் முடிந்து விட்­டது என்­கின்­ற­னர் அங்­கி­ருந்­த­வர்­கள். இந்­தத் தாக்­கு­த­லில் 112 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். உயி­ரி­ழந்­த­வர்­க­ளில் 105 பேரின் சட­லங்­கள் நீர்­கொ­ழும்பு மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன. 7 பேரின் சட­லங்­கள் ராகம மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

கொச்­சிக்­கடை
நீர்­கொ­ழும்­பில் தாக்­கு­தல் இடம்­பெற்ற சிறி­து­நே­ரத்­தில் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னி­யார் தேவா­ல­யத்­தில் இரண்­டா­வது குண்டு வெடித்­தது. பூசை வழி­பா­டு­கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருந்­த­போது, ஆல­யத்­தி­னுள் ஓடி வந்த தற்­கொ­லை­தாரி குண்டை வெடிக்க வைத்­தார் என்று அங்கு பூசை மேற்­கொண்ட மத­குரு ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் திடீர் தாக்­கு­த­லால் ஆல­யம் நிலை­கு­லைந்­த­து­டன் பெரும் கரும்­புகை அந்­தப் பகு­தி­யில் வெளிக்­கி­ளம்­பி­யது. மக்­கள் பத­றி­ய­டித்து வெளி­யில் ஓடி­னர். காய­ம­டைந்­த­வர்­களை நோயா­ளர் காவு­வண்­டி­க­ளில் ஏற்­றிச் சென்­ற­னர். கொழும்பு நகர வீதி­கள் எங்­கும் நோயா­ளர் காவு வண்­டி­யின் ஓசை­களே கேட்­டுக் கொண்­டி­ருந்­தன.

போர்க் காலங்­க­ளில் இருந்­த­தைப் போன்ற பதற்­றம் கொழும்பு நகர் எங்­கும் பர­வி­யி­ருந்­தது. மக்­கள் அச்­சத்­தில் மூழ்­கி­யி­ருந்­த­னர். இந்­தத் தாக்­கு­த­லில் 70 பேர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­த­னர்.

மட்­டக்­க­ளப்பு
மட்­டக்­க­ளப்­பில் அமைந்­துள்ள சியோன் தேவா­ல­யத்­தில் காலை 9 மணிக்கு அடுத்த குண்­டு­வெ­டித்­தது. தற்­கொ­லை­தாரி என்று நம்­பப்­ப­டும் நபர் ஒரு­வர் ஆல­யத்­தி­னுள் புகுந்து ‘உமர்’ என்று கத்­தி­ய­வாறு குண்டை வெடிக்க வைத்­தார் என்று தாக்­கு­த­லில் தப்­பிய ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

குறித்த நபர், ஆலய வழி­பாடு எத்­தனை மணிக்கு ஆரம்­ப­மா­கும் என்ற விவ­ரங்­களை அங்­கி­ருந்­த­வர்­க­ளி­டம் கேட்­டி­ருந்­தார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. சில நிமிட நேரங்­க­ளில் நேர்ந்த இந்­தப் பேரி­டர் கார­ண­மாக வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்­டி­ருந்த சிறு­வர்­கள் உள்­ளிட்ட 28 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

உல்­லாச விடு­தி­க­ளும் இலக்கு
கொழும்பு நக­ரி­லுள்ள முக்­கிய நட்­சத்­திர உல்­வி­லாச விடு­தி­க­ளான சங்­க­ரில்லா, சின­மன், கிங்ஸ்­பெரி ஆகி­ய­வற்­றி­லும் சம­நே­ரத்­தில் குண்­டு­கள் வெடித்­துள்­ளன. சி4 ரகத்­தைச் சேர்ந்த 25 கிலோ வெடி­பொ­ருள்­களை, ஹோட்­டல்­க­ளின் வர­வேற்பு அறை, வராந்­தா­வில் வைத்து வெடிக்க வைக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஹோட்­டல்­க­ளில் பெரும் சத்­தத்­து­டன் அவை வெடித்­துள்­ளன. ஹோட்­டல்­க­ளில் தங்­கி­யி­ருந்த வெளி­நாட்­ட­வர்­கள் உள்­ளிட்ட பலர் உயி­ரி­ழந்­த­னர்.

தாக்­கு­த­லா­ளிக் நேற்­று­முன்­தி­னமே ஹோட்­டல்­க­ளில் அறையை முற்­ப­திவு செய்து அங்கு தங்­கி­யி­ரு­த­னர் என்று தமது முதல் கட்ட விசா­ர­ணை­க­ளில் அறிந்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­விக்­கின்­ற­னர். குண்­டு­வெ­டிப்­புக்­களை அடுத்து ஹோட்­டல்­க­ளில் தங்­கி­யி­ருந்­தோர் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர். இந்­தத் தாக்­கு­தல்­க­ளில் 32 வெளி­நாட்­ட­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

மாலைத் தாக்­கு­தல்
காலை­யில் இடம்­பெற்ற இந்­தத் தாக்­கு­தல்­கள் கார­ண­மாக நாடே அதிர்ச்­சி­யில் மூழ்க்­கி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் நேற்று மதி­யம் தெஹி­வளை மிரு­கக்­காட்­சிச்­சா­லைக்கு அரு­கி­லுள்ள விடு­தி­யில் திடீ­ரென குண்டு வெடித்­துள்­ளது. இதில் இரு­வர் உயி­ரி­ழந்­த­னர். தற்­கொ­லைத்­தாரி குண்டை வெடிக்க வைத்­தார் எனப் பொலி­ஸார் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

இதைத் தொடர்ந்து தெமட்­ட­கொ­ட­வி­லும் குண்­டு­வெ­டிப்பு இடம்­பெற்­றது. தாக்­கு­த­லா­ளி­கள் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­வர்­களை தெமட்­ட­கொ­ட­வில் இருந்த ஒரு வீட்­டில் கைது செய்­யச்­சென்­ற­போது, அவர்­கள் குண்­டு­வெ­டிக்க வைத்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தா­க­வும்.இதில் பொலி­ஸா­ரும் உயி­ரி­ழந்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

கூட்­டம்
இந்­தத் திடீர் தாக்­கு­தல்­க­ளைத் தொடர்ந்து உயர்­மட்­டக் கூட்­டம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­யை­மில் அல­ரி­மா­ளி­கை­யில் நேற்று இரவு இடம்­பெற்­றது. எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, சபா­நா­ய­கர் கரு, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், அமைச்­சர் ரவூப் ஹக்­கீம், பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோர் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

இந்­தக் கூட்­டம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது: நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலமை தொடர்­பில் பொலிஸ்மா அதி­பர் விளக்­க­ம­ளித்­தார். இந்­தத் தாக்­கு­தல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பே மேற்­கொண்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது என்று கூறி­னார். தாக்­கு­தலை நடத்­தி­ய­வர்­கள் இலங்­கை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் அவர்­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளில் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டார். தாக்­கு­தல் நடத்­திய குழு­வின் வலைப் பின்­ன­லைத் தாம் கண்­டு­பி­டித்­துள்­ள­னர் என்­றும் தெரி­வித்­தார் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார்

இவ்வாறு உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Response