ஒரு விக்கெட் 15 ஓவர் – ஐதராபாத் அதிரடியில் அடங்கிய கொல்கத்தா

ஐபிஎல் 12, ஐதராபாத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 38 ஆவது லீக் போட்டி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 (47) ரன்கள், ரிங்கு சிங் 30 (25), ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சிறப்பாகப் பந்து வீசிய சயத் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா மற்றும் ரஷீத் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

கொல்கத்தா பவுலர்கள் வீசிய பந்துகளை நான்காபுறமும் பறக்கவிட்டனர். இவ்விரு வீரர்களும் 28 பந்துகளில் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தினை பதிவு செய்தனர்.

இறுதியில் ஐதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை (161 ரன்கள்) எட்டியது.

இதனையடுத்து, ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில், அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 67 (38) ரன்களும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ கடைசிவரை ஆட்டமிழாக்காமல் 80 (43) ரன்களும் விளாசினர்.

கொல்கத்தா அணியில், பிரித்விராஜ் 1 விக்கெட் விழ்த்தினர்.

Leave a Response